இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தங்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ், வரும் 21-ஆம் தேதி தொடங்கி 4 நாள் பயணமாக சீனா செல்கிறார். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை அவர் 22-ஆம் தேதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். டோக்கா லாம் உள்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே சீரற்ற நல்லுறவு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் சுஷ்மா சீனா செல்ல உள்ளார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூ சுன்யிங், பெய்ஜிங்கில் புதன்கிழமை கூறியதாவது:
சுஷ்மா ஸ்வராஜ் சீனா வருவதால் இருநாடுகளுக்கும் இடையே இருக்கும் நல்லுறவு மேலும் வலுப்படும். பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க சீனா தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக சுஷ்மாவிடம் கலந்தாலோசிக்கப்படும். சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டிலும் சுஷ்மா பங்கேற்கிறார். அத்துடன், ஹிந்தி பயின்றுவரும் சீன மாணவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டு உறுப்பினர்களாக இணைந்தன. இந்த அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை உறுப்பினர்களாக இருந்துவரும் இதர நாடுகள் ஆகும். பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், ஜூன் மாதம் சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு முன்னோட்டமாகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் அமையும் என்றார் ஹாவ் சன்யிங்.
இதனிடையே, சீனாவில் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அங்கு செல்கிறார்.
முன்னதாக, சீன வெளியுறவு விவகாரங்கள் துறை ஆணையத்தின் இயக்குநரும், அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான யாங் ஜீச்சியை ஷாங்காய் நகரில் கடந்த 13-ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
சீனா-பாகிஸ்தான் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டு வருவது, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக சீனா எதிர்ப்பு தெரிவிப்பது, சர்வதேச பயங்கரவாதியாக ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை அறிவிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆகியவை இருநாடுகளுக்கு இடையே நிலவிவரும் முக்கிய பிரச்னைகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன?

கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: கேரளத்தைச் சேர்ந்த இருவர் பலி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
