அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மேற்கு வங்கம்: சூறைக்காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

News image

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு சூறைக்காற்று வீசியதால், மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த கார்.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:27 am IST

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதகிளில் செவ்வாய்க்கிழமை இரவு 7.42 மணிக்கு வடமேற்கு பருவக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. மணிக்கு 98 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றினால், கொல்கத்தாவில் 26 இடங்களில் 500-க்கும் அதிமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 
நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 7.50 மணியில் இருந்து மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரத்துக்கு பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. விமானங்கள் வந்து செல்வதும் தாமதமாகின.
காற்று பலமாக வீசியதால் நேரிட்ட விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவில் 7 பேரும், ஹெளரா மாவட்டத்தில் 6 பேரும், பங்குரா, ஹூக்ளி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
வாகனங்களில் செல்லும்போது மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியதாலும், சுவர் இடிந்து விழுந்ததாலும், இந்த விபத்துகள் நேரிட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். 
இதனிடையே, இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, உடனடியாக அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.