கிராமங்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளித்து வந்தவர் காந்தி: மோடி புகழாரம்! 

மகாத்மா காந்தி எப்பொழுதும் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தவர் என்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான செவ்வாயன்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கிராமங்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளித்து வந்தவர் காந்தி: மோடி புகழாரம்! 
Published on
Updated on
1 min read

இந்தூர்: மகாத்மா காந்தி எப்பொழுதும் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தவர் என்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான செவ்வாயன்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கிராமங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை வழங்குவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 24-4-2010 அன்று 'பஞ்சாயத்து ராஜ்' சட்டத்தினை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்று துவங்கி இந்த சட்டம் அறிமுகப்படுத்த நாள் நாடு முழுவதும் 'தேசிய பஞ்சாயத்து ராஜ்' தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் செவ்வாயன்று  கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்லா மாவட்டத்திற்குட்பட்ட ராம்நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்பொழுது கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசின் 'ராஷ்டரிய கிராம சுவராஜ் அபியான்' என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அத்தத்துடன் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் மேம்பாட்டிற்காக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கான செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை பொருத்தமட்டில் திட்டங்களுகான் நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், கடந்த ஆண்டுகளில் இதில் பல குறைபாடுகள் இருந்தன. ஆனால் தற்பொழுது , ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் செலவழிக்கப்படுகிறதா என்பதன் அவசியம் குறித்தது பொதுமக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

நமது தேசத்தந்தையான மகாத்மா காந்தி எப்போதுமே கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தவர. அத்துடன் கிராமங்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் கிராம சுயராஜ்ஜியம் தொடர்பாக வலியுறுத்தி பேசி வந்தவர்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com