நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி மோசடி: 'ஏர்செல்' சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு 

ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ. 600 கோடி வரை பண மோசடி செய்ததாக ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர்  சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 5:58 pm IST

சென்னை: ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ. 600 கோடி வரை பண மோசடி செய்ததாக ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர்  சிவசங்கரன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமிழகத்தின் தொலைத் தொடர்பு துறையில் முன்னோடி சேவை நிறுவனமானகத் திகழ்ந்தது ஏர்செல். இதனை உருவாக்கியவர் தமிழரான சிவசங்கரன். ஆனால் பின்னர் சர்ச்சையான ஒரு சூழ்நிலையில் தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான 'மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க முடியாமலும்  அதிகமான கடன் நெருக்கடி காரணமாகவும் ஏர்செல் தன்னுடைய சேவையை வழங்குவதில் தடுமாறி வந்தது. பின்னர் சமீபத்தில் தன்னுடைய சேவையை முழுமையாக நிறுத்தி விட்டது.

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ. 600 கோடி வரை பண மோசடி செய்ததாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து, ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர்  சிவசங்கரன் மீது சிபிஐ தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.