கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கர்நாடக தேர்தல்: ஒருவரை மட்டும் கொஞ்சம் தள்ளியிருக்கச் சொல்லும் பாஜக தலைமை

கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சுரங்க மோசடியில் பரபரப்பை ஏற்படுத்திய ஜனார்த்தன ரெட்டியை மட்டும் சற்று தள்ளியிருக்கும்படி பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 7:28 am

DIN


பெங்களூரு: கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சுரங்க மோசடியில் பரபரப்பை ஏற்படுத்திய ஜனார்த்தன ரெட்டியை மட்டும் சற்று தள்ளியிருக்கும்படி பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

ரெட்டியின் சகோதரர்களுடன் பாஜக இணக்கம் காட்டி வருவது தொடர்பாக, கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் வறுத்தெடுத்து வரும் நிலையில், பாஜக தலைமையிடம் இருந்து நேரடியாக ஜனார்த்தன ரெட்டிக்கு இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

பாஜக வேட்பாளர் பி. ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக திறந்தவெளி பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனார்த்தன ரெட்டியிடம், பாஜக வேட்பாளர்களுடன் நேரடியாக தேர்தல் பிரசாரங்களில்  பங்கேற்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் ஜனார்த்தன ரெட்டி நடத்திய தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட பலரும் கடுமையாக விமரிசித்த நிலையில், பாஜக தலைமை இந்த அறிவுறுத்தலை அனுப்பியது.

அதோடு, பாஜக வேட்பாளர்களுடன் பொது நிகழ்ச்சிகளில், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடன் ஜனார்த்தன ரெட்டி பிரசாரத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் அளித்த ஸ்ரீராமலு, அவர் என்னுடைய நண்பர் என்ற முறையில்தான் பிரசாரத்துக்கு வந்தார் என்றும், அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சில பாஜக தலைவர்கள், அமித் ஷா, ஜனார்த்தன ரெட்டியிடம் பேசவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. எங்களுக்கு அவர் ஒரு சுமைதான். அவரது பிரசாரம் எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. அவர் வேண்டும் என்றே பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரால் கட்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.