எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ராஞ்சி அனுப்பப்பட்டார் லாலு: அரசியல் சதி என குற்றச்சாட்டு

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நிலை முன்னேறிவிட்டதால், அவர், ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு மீண்டும்
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை வெளியேறும் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்.
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து திங்கள்கிழமை வெளியேறும் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்.
Updated on
2 min read

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நிலை முன்னேறிவிட்டதால், அவர், ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், தன்னை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அரசியல் சதிதான் காரணம் என்று லாலு குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லாலுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத், கடந்த மார்ச் 17-ஆம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்தார். 
விசாரணைக்குப் பிறகு இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு தில்லிக்கு சென்று சிகிச்சை பெற அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் 29-ஆம் தேதி ரயில் மூலம் தில்லி வந்த லாலு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் பிகாரில் நடைபெற்ற தனது மகனின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் லாலு பங்கேற்கவில்லை.
இந்நிலையில், லாலுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதால் அவரை மீண்டும் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவிட எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவமனை இயக்குநருக்கு லாலு கடிதம் எழுதினார். தான் முழுமையாக குணமடையும் வரை மருத்துமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். தனக்கு இதய பிரச்னை, நீரிழிவு, சிறுநீரக நோய்த்தொற்று, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் இருப்பதாக லாலு தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
எனினும், மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காகவே எய்ம்ஸ் மருத்துமனைக்கு லாலு வந்தார். இப்போது, அவரது உடல் நிலை தேறிவிட்டது. பயணம் செய்வதால் அவருக்கு பிரச்னை ஏற்படாது. ரிம்ஸ் மருத்துவமனையில் அவர் இருந்தாலே போதுமானது' என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லாலுவின் ஆதரவாளர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் வன்முறையில் ஈடுபட்டனர். 
இதில் மருத்துவமனையின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மருத்துவமனையின் பாதுகாவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் லாலு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் எய்ம்ஸ் மருந்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னதாக, லாலுவின் உடல்நிலை முழுமையாக குணமடையாத நிலையில், அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றுவது அவரைக் கொலை செய்ய நடக்கும் சதி என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எய்ம்ஸ் மருத்துவனைக்கு திங்கள்கிழமை வந்து லாலு பிரசாத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது, அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
பின்னர், பிற்பகல் 3.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு புறப்பட்டார். அவர் சக்கர நாற்காலியில் வைத்து மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்
டார். பின்னர், தில்லியில் இருந்து ரயில் மூலம் ராஞ்சிக்கு புறப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com