தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேற்கு வங்கம்: இடி, மின்னல் தாக்கி 13 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:49 pm

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது: மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் இடி, மின்னல் தாக்கியது. இதில், நாடியா, முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தக்ஷின் தினாஜ்பூர், மால்டா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் பலர் தங்களுடைய வீடுகளுக்கு வெளியே இருந்த நேரத்திலும், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்திலும் இடி, மின்னலால் தாக்கப்பட்டனர். காயமடைந்த 25 பேரில் 4 பேர், புரூலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.