தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

எஸ்.சி./எஸ்.டி. புதிய மசோதாவை உடனடியாக நிறைவேற்ற அரசு விருப்பம்: ராஜ்நாத் சிங் தகவல்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கான மசோதாவை நடப்பு மழைக்கால

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:22 am IST


தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கான மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுவதே மத்திய அரசின் விருப்பம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.
எனினும், மழைக்கால கூட்டத்தொடர் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணையின்றி கைது செய்ய தடை விதித்தும், கைதான நபர்கள் முன்ஜாமீன் பெறும் வகையிலும் விதிகளை திருத்தி உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் அப்பாவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்வதாக உள்ளது எனக் கூறி எதிர்க்கட்சிகளும், தலித் அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தி வந்தன.
இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த விவகாரத்தை, வியாழக்கிழமை மக்களவையில் மல்லிகார்ஜுன கார்கே, உடனடி கேள்வி நேரத்தில் எழுப்பினார். எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த காலங்களில் பல விஷயங்களுக்காக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்ததைப் போல, இந்த விவகாரத்திலும் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத்தலைவரை கடந்த மார்ச் மாதத்தில் சந்தித்து அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ராஜ்நாத் சிங்: இதையடுத்து, அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அவையில் எழுப்பியிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
புதிய மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்று அவர் கூறினார். 
தேவைப்படும் பட்சத்தில், மிகக் கடுமையான விதிகளும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருப்பதையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
அவைத்தலைவர் கண்டிப்பு: உடனடி கேள்வி நேரத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதை போல, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு (என்ஆர்சி) விவகாரம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் செளகதா ராய் பேசினார்.
உடனடி கேள்வி நேரம் என்பது மிக குறுகிய காலம் என்பதால் அவர்களை சுருக்கமாக பேசுமாறு அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் நீண்ட நேரம் பேசினர். 
இதையடுத்து, மூத்த தலைவர்களே இதுபோன்று நடந்துகொண்டால், புதியவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று சுமித்ரா மகாஜன் கண்டிப்புடன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.