பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

காங்கிரஸுடன் சோக்ஸிக்கு தொடர்பு: பாஜக குற்றச்சாட்டு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:15 am IST


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,400 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 
இதுகுறித்து, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள், வெளிநாடுகளில் இருந்து வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தளர்த்தினார். இதன் காரணமாக, பலன் பெற்ற நிறுவனங்களில் மெஹுல் சோக்ஸியின் நிறுவனமும் ஒன்றாகும். இந்த விவரங்களை ஏற்கெனவே பகிரங்கப்படுத்தியிருக்கிறேன்.
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த மெஹுல் சோக்ஸியின் வெளிநாட்டு வழக்குரைஞர், காங்கிரஸ் கட்சிக்கும், சோக்ஸிக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தினார். அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற விவகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், சோக்ஸியுடனான தொடர்பு குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.
சோக்ஸியை இந்தியா அழைத்து வந்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.