பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 11:30 am IST

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகார சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பு வாசிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் "சட்டப் பிரிவு 35ஏ'-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சிப் பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. 

ஆனால் ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதி சந்திரசூட் வராத காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  

குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் கடந்த 1954-ஆம் ஆண்டு அரசமைப்பில் சேர்க்கப்பட்ட "சட்டப்பிரிவு 35-ஏ'-ஆனது, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தையும், சில உரிமைகளையும் வழங்குகிறது. அந்தச் சட்டப் பிரிவின்படி, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.