கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பங்களா சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: தகவல் தருவோருக்கு அகிலேஷ் யாதவ்  ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதை சேதப்படுத்தியவர்கள் குறித்து

Updated On :

உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த அரசு பங்களா சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதை சேதப்படுத்தியவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
பங்களா சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக அகிலேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமாஜவாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் அகிலேஷ் பேசியதாவது:
பங்களா சேதப்படுத்தப்பட்ட அன்று இரவில் செய்தி தொலைக்காட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். பங்களாவை சேதப்படுத்திய நபர்கள் குறித்த தகவல் அவர்களுக்கு தெரிந்திருந்தால், அதை தெரிவிக்கும் பட்சத்தில் ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகை, சமாஜவாதி தொண்டர்களிடம் தலா ரூ.2,000-ஆக சேகரிக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
முதல்வர் பதவியை இழந்த பிறகும் அகிலேஷ், அரசு பங்களாவில் குடியிருந்து வந்தார். இந்நிலையில், அரசு பங்களாவை காலி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அகிலேஷ் அந்த பங்களாவை கடந்த ஜூன் மாதம் காலி செய்தார்.
இந்நிலையில், அந்த பங்களாவில் சில இடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக விடியோ பதிவு வெளியானது. அது, தன் மீது களங்கம் கற்பிக்க மாநில பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என அகிலேஷ் கூறினார். எனினும், இதுதொடர்பாக அகிலேஷுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு விசாரணை நடத்த மாநில ஆளுநர் ராம் நாயக் அறிவுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.