
ஃபரூக் வீட்டில் இளைஞர் கொலை: ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
தேசிய மாநாட்டுக் கட்சித் (என்.சி.) தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கோரி, ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு அந்த மாநில
தேசிய மாநாட்டுக் கட்சித் (என்.சி.) தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கோரி, ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு அந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்முவில் உள்ள ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள பொருள்களை சூறையாடிய இளைஞர் சையது முப்ராத் ஷா (25) என்பவர் கடந்த சனிக்கிழமை சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எதற்காக அவர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்கு சென்றார்? என்பது இதுவரை தெரியவில்லை. அவரது பின்னணி குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தை ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஜம்முவில் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர், ஜம்மு பிராந்திய காவல்துறை ஐ.ஜி ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது.
அதில் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும். எனவே, இந்தத் தேதிக்குள் மாநில காவல்துறை தலைவரும், ஜம்மு பிராந்திய காவல்துறை ஐ.ஜி.யும் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






