அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து என்ஆர்சி விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை எதிர்க்கட்சிகள் அளித்தன.
என்ஆர்சி இறுதி வரைவு பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அஸ்ஸாமில் அவர்கள் மிக நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
என்ஆர்சி விவாகரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திசைதிருப்பும் வகையில் மத்திய அரசு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. என்ஆர்சியை வெளியிட்டதன் மூலமாக அரசமைப்புச் சட்டம், நீதித் துறை, நாடாளுமன்றம், ஊடகம் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கிவிட்டது தெரிகிறது.
நாட்டின் உயர்ந்த அமைப்புகளை பாதுகாக்க வேண்டுமானால், என்ஆர்சியில் ஒரு இந்தியரின் பெயர் கூட விடுபடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60,000 விவசாயிகளை ஏமாற்றுவதா? - அன்புமணி கண்டனம்

கனடாவில் இந்தியப் பெண் கொலை வழக்கு: 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞர் கைது

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்- ஒடுகத்தூரில் வினோத நிகழ்வு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


