ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கேரளா வெள்ளம்: ஒன்றாக நேரில் பார்வையிட்ட முதல்வர், எதிர்கட்சித் தலைவர்

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2018, 4:55 am

DIN

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. மொத்தம் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கேரளத்தில் உள்ள 40 ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் முதலாவது மதகு கடந்த வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் மேலும் நான்கு மதகுகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் இடுக்கி பகுதியில் தரையிறங்க வேண்டிய சூழலில் அங்கு மோசமான வானிலை காரணமாக வயநாடு பகுதியில் தரையிறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.