புது தில்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அவர் பேசும்போது, "பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா? அவரால் என்னுடைய கண்களை பார்த்து பேச முடியாது. அவர் எங்கு வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் என்னுடைய கண்களை பார்க்க முடியாது" என்று தெரிவித்தார்..
இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் ஒரு நொடி கூட என்னுடன் வாதம் செய்ய இயலாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
திங்களன்று கர்நாடக மாநிலம் பிதாரில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஏற்கனவே விடுத்த சவாலை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் எவ்வளவு நேரமென்றாலும் விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன், அவரால் ஒரு நொடி கூட என்னுடன் விவாதம் செய்ய முடியாது. திருட்டில் ஈடுபடும் ஒருவரால் என்னுடைய கண்களை நேராக பார்க்கவே முடியாது
இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சானது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



