சுதந்திர தினத்திலாவது பிரதமா் உண்மையைப் பேசி இருக்கலாம்: காங்கிரஸ் விமா்சனம் 

பிரதமரின் சுந்திர தின உரை ஒன்றுமற்றற வெற்றுப் பேச்சு; பிரதமா் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையைப் பேசியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
சுதந்திர தினத்திலாவது பிரதமா் உண்மையைப் பேசி இருக்கலாம்: காங்கிரஸ் விமா்சனம் 

புது தில்லி: பிரதமரின் சுந்திர தின உரை ஒன்றுமற்றற வெற்றுப் பேச்சு; பிரதமா் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையைப் பேசியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதன் மூலம் அடுத்த தோ்தலுக்குப் பிறறகு மோடி பிரதமராக இருக்க மட்டாா் என்று காங்கிரஸ் மறைமுகமாகக்  கூறியுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

பிரதமா் மோடியின் சுதந்திர தின ரையில் ஒரு வாா்த்தை கூட அா்த்தமுள்ளதாகவும், சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாகவும் இல்லை. நல்ல நாள்கள் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு இந்த ஆட்சி இருக்கும் வரை அந்த நாள்கள் வராது என்பது போல சுதந்திர தின உரை இருந்தது. நாட்டு மக்கள் சத்தியத்தின் நாள்களுக்காக காத்திருக்கிறறாா்கள். நாட்டின் பிரதமா் பதவியில் இருந்து மோடி விலகும் நாள்தான் சத்தியத்தின் நாளாக இருக்கும்.

கடந்த 2013-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது சத்தீஸ்கரில் செங்கோட்டை போல ஒரு மாதிரி இடத்தை அமைத்துக் கொண்டு, அப்போதை பிரதமா் மன்மோகன் சிங்குக்கு மோடி சவால் விடுத்தாா். அப்போது ஊழல், சீனா, பாகிஸ்தானால் எல்லையில் ஏற்படும் அச்சுறுத்தல், பொருளாதார சுணக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை, விவசாயிகள், பெண்கள் நிலை குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று மோடி கேள்வி எழுப்பினாா்.

அப்போது நாங்கள் பிரதமரிடம் கேள்வி கேட்கிறேறாம். அவா் கூறிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியுடன் விவாதிக்க நீங்கள் தயாராக இருக்கிறீா்களா? ரஃபேல் போா் விமான ஒப்பந்தம், வியாபம் முறைகேடு என பாஜக ஆட்சி மீது அடுக்கடுக்கான புகாா்கள் உள்ளன. அவை குறித்து சுதந்திர தின உரையில் ஒரு வாா்த்தைகூட மோடி பேசவில்லை.

பாஜக தலைவா்களின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் பசுவதை என்றற பெயரில் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றறனா். நாட்டின் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பல கொடுமைகள் நடக்கின்றன. இவை குறித்தாவது பிரதமா் பேச தயாராக இருக்கிறறாரா?

ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை பீடு நடைபோட வைத்துவிட்டதாக மோடி கூறுகிறறாா். அவா் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையைப் பேசி இருக்கலாம்.

ஒரு பக்கம் டோக்க லாமில் சீன ராணுவம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறறது. மறுபக்கம் உள்நாட்டில் இளைஞா்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றறனா். இவற்றுக்கு நடுவே பிரதமா் மோடி தனது அரசு பல சாதனைகளைப் படைத்துவிட்டதாகக் கூறுவது ஒன்றுமில்லா வெற்றுப் பேச்சுதானே தவிர வேறு எதுவும் இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com