‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு: விடுபட்டவர்கள் சதவீத விவரத்தை மாவட்ட வாரியாக சமர்ப்பிக்க உத்தரவு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) வரைவுப் பட்டியலில் விடுபட்டவர்களின் சதவீதத்தை மாவட்ட வாரியான தகவல்களாக சமர்ப்பிக்குமாறு அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளருக்கு

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) வரைவுப் பட்டியலில் விடுபட்டவர்களின் சதவீதத்தை மாவட்ட வாரியான தகவல்களாக சமர்ப்பிக்குமாறு அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அந்தத் தகவல்களை சீலிடப்பட்ட உரையில் சமர்ப்பிக்குமாறு கூறிய நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கோர மறுப்பு தெரிவித்துவிட்டது. 
எனினும், என்ஆர்சி விவகாரத்தில் மத்திய அரசின் நடைமுறைகள் குறித்து இந்திய பதிவுத் துறை தலைவர், அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர், அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், அனைத்து அஸ்ஸாம் சிறுபான்மையின மாணவர்கள் சங்கம் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
அத்துடன், என்ஆர்சி வரைவுப் பட்டியலை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அதன் நகல்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலாவுக்கு உத்தரவிட்டது.
அஸ்ஸாம் என்ஆர்சி விவகாரத்தில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதி முதல் பெற வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, என்ஆர்சி வரைவு பட்டியலில் விடுபட்டு அதுதொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் 40 லட்சம் பேரின் பயோமெட்ரிக் தகவல்களை பெற்று, அதன் மூலமாக தனித்துவ அடையாளம் உருவாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசு கூறியிருந்தது. மேலும், என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியான பிறகு அதில் இடம்பெற்றவர்களுக்கு இந்தியருக்கான அடையாளமாக ஆதார் எண் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
வங்கதேசத்தவர்கள் இந்தியாவில் ஊடுருவி அஸ்ஸாமில் தலைமுறைகளை கடந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், அங்கு வாழும் உண்மையான இந்தியக் குடிகளை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதன் வரைவுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியானபோது அதில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. இதில், சுமார் 37.59 லட்சம் பேரின் பெயர் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2.48 லட்சம் பேரின் பெயர்கள் நிலுவையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.