முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
தமிழக அரசு:
நாளை நாள் பொது விடுமுறை அறிவிப்பு. மேலும், 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவிப்பு.
பஞ்சாப் அரசு:
வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் நாளை செயல்படாது. அவரது மறைவையொட்டி 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிப்பு.
ஜார்கண்ட் அரசு:
7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், அங்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச அரசு:
நாளை பொது விடுமுறையும், 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் அரசு:
7 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. அதோடு நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு:
நாளை பொது விடுமுறை, 7 நாள் துக்கம் அனுசரிப்பு என அறிவிப்பு.
உத்தர பிரதேச அரசு:
நாளை பொது விடுமுறையை அறிவித்துள்ளது.