கேரளாவில் அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் மழையால் 14 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு கேரளாவில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிகைகள் முழுவீச்சில் நடைபெறு வருகின்றன.
இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,
வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமர், உள்துறை அமைச்சர் தேவையான உதவிகள் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். விரைவில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







