பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கேரளத்தில் 3 நாள்களில் 170 ரயில்கள் இயக்கம்

கேரள மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 159 விரைவு ரயில்கள் உள்பட 170 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:30 am IST


கேரள மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் 159 விரைவு ரயில்கள் உள்பட 170 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் இருந்து பல்வேறு நிவாரண உதவிகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 3 ரயில்களில் குடிநீர் அனுப்பும் பணியை மேற்கொண்டது. அத்துடன் கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் அனுப்பும் பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர, பிற இடங்களுக்கும் ரயில் தொடர்பை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் கடந்த 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் 11 சாதாரண பாசஞ்சர் ரயில்கள், 159 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.