தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஜார்க்கண்ட்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள கேரள சமாஜம்' என்ற மலையாள மக்கள் சங்கம், இந்த ஆண்டு ஓணம்

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் உள்ள கேரள சமாஜம்' என்ற மலையாள மக்கள் சங்கம், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடுவதை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் பொது செயலாளர் சுனில் குமார் கூறியதாவது: எங்கள் சங்கத்தின் சார்பாக ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் மழையினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர். இந்த வேளையில் ஓணம் கொண்டாடும் நிலையில் நாங்கள் யாரும் இல்லை. சங்க உறுப்பினர்கள் மூலம் ஜாம்ஷெட்பூர் முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்து நிவாரண நிதி மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருள்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை கேரள மக்களுக்கு செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சங்கம் சார்பாக 2 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு மீட்பு பணிக்கு தேவையான பொருள்களை பெற்று வருகிறோம். திரட்டப்பட்ட நிதி மற்றும் பொருள்கள் கேரள முதல்வர் நிவாரண நிதி மற்றும் நிவாரண முகாம்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து தால்பம் பகுதி துணை நிலை அதிகாரி கூறுகையில், இது வரவேற்க வேண்டிய முடிவு. நிவாரண நிதி திரட்டுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கேட்கும் அவசியம் இல்லை. நிதி திரட்டுபவர்களுக்கு ஒத்துழைப்பு தரக் கூறி காவல் துறையினரிடமும் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.