நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான 110 வீடுகளை இடிக்க உத்தரவு

பின்பி வங்கி ஊழல் குற்றவாளிகளான நிரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரது வீடுகளை இடிக்க மஹாராஷ்டிர அமைச்சர் புதன்கிழமை உத்தரவிட்டார்.
நிரவ் மோடி, மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான 110 வீடுகளை இடிக்க உத்தரவு
Updated on
1 min read

பின்பி வங்கி ஊழல் குற்றவாளிகளான நிரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரது வீடுகளை இடிக்க மஹாராஷ்டிர அமைச்சர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மஹாராஷ்டிர சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் காதம் கூறுகையில்,

மஹாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் மற்றும் முருத் பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் ஏராளமானவை உள்ளன. இதில் அலிபாக் பகுதியில் 121 வீடுகளும், முருத் பகுதியில் 151 வீடுகளும் விதிமீறி கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் தொழிலதிபர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு சொந்தமாக உள்ளது. எனவே இவைகளை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றில் நிரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமாக அலிபாக் பகுதியில் 60 மற்றும் முருத் பகுதியில் 50 வீடுகள் உள்ளன. இவைகளை இடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ராய்காட் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவைகளுக்கு எவ்வித நஷ்டஈடுகளும் வழங்கப்படமாட்டாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com