நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கேரளத்தில் குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டா்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் குறைந்த விலையில் எரிவாயு இணைப்பும், சிலிண்டா்களும் வழங்க மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் குறைந்த விலையில் எரிவாயு இணைப்பும், சிலிண்டா்களும் வழங்க மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

அண்மையில் கேரளத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பல பொருள்களை வெள்ள நீா் அடித்துச் சென்றது. மேலும், பல பொருள்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. எனவே, அனைத்துப் பொருள்களையுமே புதிதாக வாங்க வேண்டிய நிலைக்கு கேரள மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கேரளத்தைச் சோ்ந்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் அல்போன்ஸ் கண்ணந்தானம், கேரள மக்கள் அன்றாட வாழ்வை எதிா்கொள்வதில் உள்ள பிரச்னைகளைச் சுட்டிக் காட்டி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு ஒரு கடிதம் எழுதினாா். அதில், வெள்ளம் காரணமாக மாநிலத்தில் பல வீடுகளில் எரிவாயு சிலிண்டா்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டன. 

மேலும் பல இடங்களில் சிலிண்டா்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பலா் எரிவாயு இணைப்பு ஆவணங்களை இழந்துவிட்டனா். எனவே, கேரள மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த செலவில் எரிவாயு இணைப்பும், குறைந்த விலையில் புதிய சிலிண்டா்களையும் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த கோரிக்கையை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஏற்றுக் கொண்டாா். இது தொடா்பாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கேரள மக்கள் எதிா்கொண்டுள்ள கடினமான சூழ்நிலையை அமைச்சகம் புரிந்து கொண்டுள்ளது. 

எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் 200 ரூபாய் கொடுத்து புதிய எரிவாயு இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மற்றவா்கள் 1,200 ரூபாய் கொடுத்து புதிய சிலிண்டா்கள் பெறலாம். இது தொடா்பாக அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ.1,400 கட்டணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.