ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சிறப்பு நீதிமன்றங்கள்: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் விவகாரத்தில், ஏற்கெனவே கேட்டிருந்த தகவல்களை மத்திய அரசு முறையாக சமர்ப்பிக்கவில்லை என உச்ச நீதிமன்றம்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

புது தில்லி: அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் விவகாரத்தில், ஏற்கெனவே கேட்டிருந்த தகவல்களை மத்திய அரசு முறையாக சமர்ப்பிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இதுதொடர்பான வழக்கை, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை விசாரணை செய்தது. 
அப்போது, மத்திய அரசு, சில உத்தரவுகளை பிறப்பிக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளியுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் கோரியிருந்த தகவல்களை சமர்ப்பிக்க மத்திய அரசு தயாராகவில்லை போல தெரிகிறது என நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ""நாட்டில் 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்காக 11 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
தில்லியில் இரண்டு நீதிமன்றங்களும்,  தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளது.
இதில் தமிழ்நாடு தவிர்த்து பிற இடங்களில், சிறப்பு நீதிமன்றம் அமைக்க சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் ஒப்புதல் அளித்துவிட்டன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.