பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பணமதிப்பிழப்பு நடந்து 21 மாதங்களுக்குப் பிறகு.. மோடிக்கு கபில் சிபலின் 6 கேள்விகள்

இந்த வாரம் கேள்வி வாரம் போல இருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அருண் ஜேட்லி 15 கேள்விகளைக் கேட்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கபில் சிபல் 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


புது தில்லி: இந்த வாரம் கேள்வி வாரம் போல இருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அருண் ஜேட்லி 15 கேள்விகளைக் கேட்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கபில் சிபல் 6 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் 21 மாதங்கள் ஆகும் நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று இறுதி அறிக்கையை வெளியிட்டது.

அதில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016 நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் ரூ.15.41 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10,720 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

"ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ரூ.15.31 லட்சம் கோடி ரூபாய் பழைய ரூ.5,00, ரூ.1,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் உடனடியாக அச்சடிக்கப்பட்டன. ரூபாய் நோட்டு அச்சடிப்புக்காக 2016-17-ஆம் ஆண்டில் ஆர்பிஐ ரூ.7,965 கோடி செலவிட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டு செலவிட்ட ரூ.3,421 கோடியைவிட இரு மடங்காகும். 2017 ஜூலை முதல் 2018-ஆம் ஆண்டு ஜூன் வரை ரூபாய் நோட்டு அச்சடிப்புக்காக ரூ.4,912 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் 59 சதவீதம் அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் புதிய ரூ.2000 நோட்டு வடிவில் 17,929 கள்ள நோட்டுகளும், புதிய ரூ.500 நோட்டுகள் வடிவில் 9,892 கள்ள நோட்டுகளும் பிடிபட்டுள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 21 மாதங்கள் ஆகின்றன.
1. 99% பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பி விட்டன.
2. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணத்தை மக்கள் வீட்டிலேயே வைத்திருப்பது அதிகரித்துள்ளது.
3. மக்களிடமும் அதிகளவில் பணப்புழக்கம் இருக்கிறது.
4. வங்கிகளில் முதலீடு செய்வது பெரிய அளவில் சரிந்துள்ளது.
5. கள்ள நோட்டுகள் வழக்கம் போல புழக்கத்துக்கு வந்துவிட்டன.
6. பயங்கரவாத நடவடிக்கைகளும் குறையவில்லை

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கருப்புப் பணம் எப்படி வெள்ளையானது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.