வீடு தேடி வரும் அரசின் 100 சேவைகள்: தில்லி முதல்வரின் அசத்தல் திட்டம்

செப்டம்பர் மாதம் முதல் தில்லி மக்களுக்கு அரசின் 100 விதமான சேவைகளும் வீடு தேடி வந்தடையும் அசத்தல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
வீடு தேடி வரும் அரசின் 100 சேவைகள்: தில்லி முதல்வரின் அசத்தல் திட்டம்
Updated on
1 min read

செப்டம்பர் மாதம் முதல் தில்லி மக்களுக்கு அரசின் 100 விதமான சேவைகளும் வீடு தேடி வந்தடையும் அசத்தல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதன்மூலம் பள்ளிச் சான்று, சாதிச் சான்று, திருமணச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, வருமானச் சான்று, புதிய குடிநீர் இணைப்பு, மிண் இணைப்பு என அரசின் 100 விதமான சேவைகள் மக்களின் வீடு தேடி வரும் திட்டம் தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 100 விதமான சேவைகளையும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பெற முடியும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக செயலியின் மூலம் பார்கோட் ஸ்கேன் செய்து, பயோமெட்ரிக் பதிவு ஏற்படுத்தி ஒருவர் தனக்கு தேவையான சேவையை வீட்டிலேயே பெற முடியும். இதற்கான சேவைக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். 

அரசின் சேவைகள் உங்கள் வீடு தேடி வருகிறது. இந்திய அரசாங்கத்தில் இது ஒரு புரட்சிகர திட்டமாகும். இதனால் ஊழல் ஒழியும். மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் இன்றி அனைத்து சேவைகளையும் பெற முடியும். உலகத்திலேயே இதுபோன்று அரசு சேவைகள் வீட்டிலேயே பெறுவது இதுவே முதன்முறையாகும். செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கவுள்ளது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com