நிகழாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், அரசின் 100 இணையதளங்களில் விஷமிகள் ஊடுருவியதாக மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அளித்த பதிலில், கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், தேசிய தகவலியல் மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையதளங்கள் உள்பட 105 இணையதளங்களில் விஷமிகள் ஊடுருவியுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 172-ஆக இருந்தது.
இணையத் தாக்குதல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
ஆதார் சேவை மையங்கள்: இதேபோல், மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக வங்கிக் கிளைகள், அஞ்சல் அலுவலகங்களில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்கள், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை செயல்படும் என்று தெரிவித்தார்.
ரயில் பயணிகள் புகார்: ரயில்களில் தரம் குறைந்த உணவு விநியோகிக்கப்பட்டதாக, கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 7,500 பயணிகளிடம் இருந்து புகார்கள் கிடைக்கப் பெற்றதாக ரயில்வே துறை இணையமைச்சர் ராஜன் கோஹைன் மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக உணவு விற்பனையாளர்களுக்கு சுமார் ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனி நேர மண்டலம் கிடையாது: வடகிழக்கு பிராந்தியத்துக்கென தனியாக நேர மண்டலத்தை கடைப்பிடிக்க வேண்டாம் என்று உயர்நிலை குழு பரிந்துரைத்துள்ளதாக மக்களவையில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்தார்.
வடகிழக்கு பிராந்தியத்தில் சூரிய உதயம், அஸ்தமன நேரம் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபடுவதால், அந்த பிராந்தியத்துக்கென தனி நேர மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

வரிவிதிப்பு பிரச்னைகளுக்கு இந்தியா - அமெரிக்கா சுமுகத் தீா்வு: அமெரிக்கத் தூதா் வலியுறுத்தல்

ஜாம்பியா அதிபா் மீண்டும் வெற்றி!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


