மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பயங்கரவாதத்தை ஒடுக்க ஒத்துழைப்பு: இந்தியா - தென்கொரியா உறுதி

அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒடுக்க, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதென இந்தியாவும் தென்கொரியாவும் உறுதிபூண்டுள்ளன.

News image

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை புதன்கிழமை சந்தித்த தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் காங் கியுங் வா.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒடுக்க, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதென இந்தியாவும் தென்கொரியாவும் உறுதிபூண்டுள்ளன. அத்துடன், இரு தரப்பு வர்த்தகம், முதலீட்டு தொடர்புகளை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, தென்கொரியா இடையேயான 9-ஆவது கூட்டுக் குழு கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவினரும், தென்கொரியா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் காங் கியுங்-வா தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வட கொரியாவுடனான உறவுகளை, பேச்சுவார்த்தைகள் மூலம் மேம்படுத்துவதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்நாட்டிடம் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் கிழக்காசிய கொள்கையின்படி, தென்கொரியா தவிர்க்க முடியாத கூட்டாளி; கடந்த 2015-ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் சியோல் பயணத்துக்கு பிறகு, இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு சார்ந்த தொடர்புகள் வளர்ந்து வருகின்றன. இது திருப்தியளிக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தின் மதிப்பை ரூ.3.5 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இரு நாட்டு தலைவர்களும் உள்ளனர். 
அந்த இலக்கை எட்டுவதற்கு இருமடங்கு அதிக முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
ஒத்துழைப்பு: அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒடுக்க, பிராந்திய ரீதியிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருதரப்பு பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் விரைந்து முடிவை எட்டுவதற்கும், இருதரப்பு வர்த்தகம், முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டங்களை விரைந்து அமலாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப ரீதியாக உலக அளவில் சாதனை படைத்து வரும் தென் கொரிய நிறுவனங்கள், இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம், திறன்மிகு இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரங்கள் ஆகிய திட்டங்களில் தென் கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்று சுஷ்மா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.