ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சத்தீஸ்கரில் பேரிழப்பு: பூபேஷ் பாகேல்

15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சத்தீஸ்கரில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் புதன்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சத்தீஸ்கரில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் புதன்கிழமை தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பாஜகவுக்கு 15 இடங்களே கிடைத்தன. இதையடுத்து அம்மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பூபேஷ் பாகேல் பேசியதாவது:

கடந்த 15 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சத்தீஸ்கரில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர் கொல்லப்பட்டனர், நமது நாட்டின் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர், சில அரசியல் தலைவர்களும் உயிரிழந்தனர். 

இதற்கெல்லாம் முக்கிய காரணம் துப்பாக்கிகளைக் கொண்டு அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற அப்போதைய பாஜக அரசின் முதல்வர் ராமன் சிங் எடுத்த நடவடிக்கை தான் காரணம். ஆனால், தற்போது அதற்கான தீர்வு என்ன?

நக்ஸல்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. அப்பிரச்னைகளை வெளியிட்டுள்ள பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் இதற்கு நல்ல தீர்வு காண முடியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.