சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தேச விரோத கோஷத்தை தடுக்க சட்டத்தில் இடமில்லை

தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்புபவர்களைத் தடுக்க சட்டத்தில் இடம் இல்லை என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் பதிலளித்தார்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்புபவர்களைத் தடுக்க சட்டத்தில் இடம் இல்லை என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் பதிலளித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தீவிரவாதம், பிரிவினைவாதிகளின் வன்முறை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. 
தேசத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் இல்லை. இதன் காரணமாக காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கும் போது தேசத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதில் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற குற்றவாளிகளை கையாள சட்டத்தில் போதிய திருத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 
ஜம்மு காஷ்மீரில் சில உள்ளூர்வாசிகள் தேசத்துக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் மூலம் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.