
வெற்று கோஷங்களால் வறுமையை ஒழிக்க முடியாது: நிதியமைச்சர் ஜேட்லி
வறுமையை ஒழிக்கவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் உறுதிமிக்க கொள்கைகள் தேவை; வெற்று கோஷங்களால் அது முடியாது என்று மத்திய நிதியமைச்சர்

புதிய இந்தியா 75 என்ற நீதி ஆயோக் செயல்திட்ட ஆவணத்தை தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி. உடன், நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்,
வறுமையை ஒழிக்கவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் உறுதிமிக்க கொள்கைகள் தேவை; வெற்று கோஷங்களால் அது முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். வெற்று கோஷங்களை அமல்படுத்த முடியாது என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, விவசாயிகளின் கடனை ரத்து செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நெருக்கடி கொடுப்போம் என்றும், அப்படியும் அதை அவர் செய்யாவிடில், அடுத்து அமையும் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஜேட்லியின் பேச்சு அமைந்துள்ளது.
புதிய இந்தியா 75 என்ற தலைப்பிலான மத்திய கொள்கைக் குழுவின் செயல்திட்ட ஆவணத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் புதன்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
வறுமையை ஒழிப்பது குறித்த விவாதங்கள் ஜனநாயகத்தில் எப்போதும் இருக்கும். அதிக எதிர்பார்ப்பு கொண்ட மக்களிடம் மிகக் குறைந்த அளிவிலேயே பொறுமை இருக்கும். கோஷங்களை நனவாக்க முடியாது என்று இரண்டு அல்லது மூன்று நாள்களில் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
பொருளாதாரத்தை எப்போதும் நிலைநிறுத்துவது உறுதிமிக்க கொள்கைகள்தான். மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, அவர்களுக்குத் தரமான வாழ்க்கையை வழங்குவது இதுபோன்ற கொள்கைகளால்தான் சாத்தியமாகும்.
நாம் இப்போது பின்பற்றி வரும் கொள்கை என்பது இந்திய சூழலுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. இது வேகமான வளர்ச்சியை கொடுக்கும். இந்தக் கொள்கைகள் மூலமாக, அரசின் வளங்களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியும். ஒவ்வொரு கொள்கை முடிவும் இதை நோக்கித்தான் எடுக்கப்படுகின்றன என்றார் ஜேட்லி.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவான 2022-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு புதிய இந்தியா 75 என்ற செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து ஜேட்லி குறிப்பிடுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான ஜிடிபியை 8 சதவீதமாகவும், 2030-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.35 லட்சம் கோடியாக உயர்த்தும் வகையிலும் செயல்திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
புதிய இந்தியா 2022 என்ற இலக்கை எட்டுவதில் தனியார் முதலீட்டாளர்களும் அவர்களது பங்களிப்பை வழங்குவதற்கு ஏதுவாக கொள்கை முடிவுகளை வலுப்படுத்தும் வகையிலும் செயல்திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






