சென்னை: பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வெள்ளியன்று நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாகவும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் வங்கி சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடு முழுவதும் வெள்ளியன்று பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக வெள்ளியன்று அனைத்து வங்கி அதிகாரிகளும் பணிக்கு வரவில்லை. ஊழியர்கள் மட்டும் வேலைக்கு வந்திருந்தனர். எனவே வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவைகள் எதுவும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கின.
எனவே வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முக்கியமாக நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களும் விடுமுறை என்பதால் தொழில் செய்வோர், வியாபாரிகள், நிறுவனங்களின் பணப்பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஏ.டி.எம்.கள் செயல்பட்டாலும் அதிலிருந்து மிக குறைந்த அளவுதான் பணம் எடுக்க முடிந்தது. இதன் காரணமாக வர்த்தகர்கள் சிரமப்பட்டனர்.
25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இடையே 24-ந் தேதி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.
26-ந் தேதி புதன்கிழமையன்று வேலை நிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே தொடர்ச்சியாக அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும்: பாகிஸ்தான்

“16 வயதில் சச்சினை நினைவுபடுத்துகிறார் சூர்யவன்ஷி” - கபில்தேவ் புகழாரம்
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



