மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

செய்தியாளர்கள் சந்திப்பை மோடி தவிர்ப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

News image

கோப்புப் படம்

Updated On :26 டிசம்பர் 2018, 1:05 am IST


கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பை பிரதமர் மோடி தவிர்த்தது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் வட மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக பிரமுகர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி அண்மையில் கலந்துரையாடினார்.
அப்போது, வரிவதிப்பு கொள்கையால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்குள்ளானது தொடர்பாக பாஜகவினர் மோடியிடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்துவிட்டு, வேறு விவகாரம் குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமைசுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடுத்தர பிரிவு மக்களிடம் இருந்து மத்திய அரசு வரி வசூலிப்பதில் மும்முரமாய் இருக்கிறது. அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கருதவில்லை என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை மோடி புறக்கணித்தார்.
மோடி தனது ஆட்சிக் காலத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததில்லை. கட்சியினருடனான கலந்துரையாடலிலாவது அவர் பதிலளித்திருக்கலாம்.
ஒரே ஒருமுறையாவது செய்தியாளர்களுடனான சந்திப்பை மோடி நடத்த முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.