பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13,000 கோடி நிதி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தலைமறைவாகி விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிடக்கோரி, சிபிஐ விடுத்த கோரிக்கைக்கு எதிராக இன்டர்போலிடம் மெஹுல் சோக்ஸி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் என்னை சிக்க வைக்க அரசியல் சதி நடக்கிறது, இந்திய சிறைகளின் நிலை மோசமாக உள்ளது, எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று மெஹுல் சோக்ஸி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள 34 பக்க கடிதத்தில் மெஹுல் சோக்ஸி தெரிவித்திருப்பதாவது, எனது உடல்நிலைக் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்னால் இந்தியாவுக்கு 41 மணிநேரம் பயணம் செய்ய முடியாது. எனவே விடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரணைகளை நடத்த வேண்டும். மேலும் எனது கடன்களை அடைப்பது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் சுமார் ரூ.13,000 கோடி நிதி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு எதிராக தனித்தனியாக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. அதில் நீரவ் மோடி சுமார் ரூ.6,000 கோடியும், மெஹூல் சோக்ஸி சுமார் ரூ.7,080 கோடியும் மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், மெஹுல் சோக்ஸியின் நிறுவனங்கள் மட்டும் தனியே ரூ.5,000 கோடி மோசடி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








