புது தில்லி: போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விடுத்து மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள லட்டினி ஆற்றில் திடீரென வெள்ளப் பேருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த டிசம்பர் 13-ந்தேதி அங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் 15 சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புக்குத் தேவையான உயர் ரக உபகரணங்கள் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விடுத்து மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வெள்ளம் புகுந்த நிலக்கரி சுரங்கத்தில் இரண்டு வாரங்களாக 15 சுரங்கத் தொழிலாளர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அதேசமயம் பிரதமர் போகிபீல் பாலம் மீது கேமிராக்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.தொழிலாளர்களை மீட்க தேவையான உயர் அழுத்த பம்புகளை ஏற்பாடு செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது. தயவு செய்து சுரங்கத் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள் பிரதமரே.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!
நாங்கள் தோற்கவில்லை; பதவி விலக மாட்டேன்! மமதா

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


