பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தாமதமாக வந்த மாணவர்களுக்கு நிர்வாணமாக நிற்கும் தண்டனை: ஒரு சித்ரவதை பள்ளி 

தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்று  நிர்வாணமாக நிற்கும் தண்டனை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியாய்வந்துள்ளது. 

Published On :

சித்தூர்: தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்று  நிர்வாணமாக நிற்கும் தண்டனை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியாய்வந்துள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் சைதன்யா பாரதி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த புதன்கிழமையன்று காலதாமதாக வந்த நான்காவது மற்றும் ஐந்தாவது வகுப்பு மாணவர்களை  நிர்வாணப்படுத்தி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள் முட்டிப் போட வைத்துள்ளனர். இந்த தண்டனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 

சம்பவம் குறித்து  தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஆயினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 

எனவே தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அளித்துள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.