அயோத்தி ராமர் கோயிலியின் புனிதத்தை மீட்டெக்க 10 நாள் தூய்மைப்படுத்தும் சடங்கு தொடங்கியுள்ளது.
அயோத்திக்கு சடங்குகள் ஒன்றும் புதிதல்ல என்றாலும், ராமர் கோயில் அறக்கட்டளை தற்போது நடத்திவரும் 10 நாள் தூய்மைப்படுத்தும் சடங்கு தனித்துவமானது. சமீபத்தில் நடந்த நன்கொடை முறைகேடுகளுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில், இறைவனிடம் மன்னிப்பு கோருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த சடங்கு.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரியின் முயற்சியால் தொடங்கப்பட்ட தூய்மைப்படுத்தும் சடங்கு புதன்கிழமை தொடங்கியது. இதில் அயோத்தியில் உள்ள குருகுலங்களைச் சேர்ந்தவர்கள் 'விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தை' பாராயணம் செய்கின்றனர்.
விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் என்பது விஷ்ணுவின் 1,000 வெவ்வேறு பெயர்களை உச்சரிப்பதாகும். இது நேர்மறை ஆற்றல், செழிப்பு, நல்வாழ்வைக் கொண்டுவரும் என்று ஹிந்துக்கள் நம்பிக்கையாகும்.
இதுதொடர்பாக கோவிந்த் தேவ் கிரி கூறுகையில்,
ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் காணிக்கைகள் திருடப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கோயிலின் புனிதத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் வகையில், பரிகாரம் பூஜையும், தூய்மைப்படுத்துதலுக்கான 10 நாள் சிறப்புச் சடங்கையும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் தினமும் 251 முறை விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்படுகின்றது.
பால ராமரின் இடத்தில் செய்யப்பட்ட தவற்றைச் சரிசெய்யவே விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்யப்படுகின்றது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன், வால்மீகி ராமாயண பாராயணமும் நடைபெற்று வருகின்றது இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் ஜூன் 7 அன்று வெடித்தது. அதன்பின்னர் இது ஒரு பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. ராமர் கோயிலில் நன்கொடை பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். சர்ச்சைக்குரிய சூழலில், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் அப்போதைய பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ayodhya isn't new to rituals. But what makes the ongoing 10-day purification ritual by the Ram temple trust unique is that it is meant to "atone" for the recent donation theft and "seek forgiveness" from the Almighty.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: ஆக. 17-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
கடவுள் ராமர் விதித்தபடியே நடக்கும்! விடுதலை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!
அயோத்தி ராமர் கோயில் சிஇஓ பதவிக்கு 5,500 விண்ணப்பம்! என்னென்ன தகுதிகள்?





