எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!

எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக்கில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து...

News image

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம். - படம்: எக்ஸ் / வாஷிங்டன் ஃப்ரீடம்

Updated On :17 ஜூலை 2026, 3:35 pm IST

எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக்கில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சேலஞ்சர்ஸ் சுற்றிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

எலிமினேட்டரில் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சேலஞ்சர்ஸ் சுற்றி சான்பிரான்சிஸ்கோ அணியுடன் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு மோதியது. டாஸ் வென்ற சான்பிரான்சிஸ்கோ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 20 ஓவர்களில் 238/6 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கௌஸ் 73 ரன்கள் குவிக்க, ஸ்டீவ் ஸ்மித் 43 ரன்கள், மிட்செல் ஓவன் 42 ரன்கள் எடுத்தார்கள்.

சான்பிரான்சிஸ்கோ அணி சார்பில் ஜேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி த்ரில் வெற்றி பெற்றது.

சான்பிரான்சிஸ்கோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ ஷார்ட் 121 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேவியர் பார்ட்லெட் இறுதியில் 13 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

ஆண்ட்ரீஸ் கௌஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணி இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் நைட்ரைடர்ஸ் உடன் ஞாயிற்றுக்கிழமை (இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு) மோதுகிறது.

Summary

Washington Freedom won by 7 runs and into the finals of MLC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.