மும்பை: பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் ஐ -போன் ஆர்டர் செய்த பொறியாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக சலவை சோப்புக் கட்டி டெலிவரி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் தாப்ரெஜ் மெகபூப் (26). இவர் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டில் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தில், ரூ.55,000 - க்கு, தனக்கு விருப்பமான ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி ஐபோன் 8 பிளிப்கார்ட்டில் இருந்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்பமான போனை பயன்படுத்த ஆவலுடன் அதனைப் பிரித்த தாப்ரெஜ்ஜுக்கு கடும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.
காரணம் என்னவென்றால் அட்டை பெட்டியின் உள்ளே அவர் ஆர்டர் செய்த ஐ போன் 8 க்குப் பதிலாக புதிய சலவை சோப்பு ஒன்று இருந்ததுதான்.இதனால் அதிர்ச்சியடைந்த தாப்ரெஜ் உடனே காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்.
அவரது புகாரின் பேரில் தற்பொழுது மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதியதில் காவலாளி உயிரிழப்பு

சித்திரை மாத பிரதோஷம்: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


