தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சொந்தமாக ரயில்வே தடங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி?: பரிசீலிப்பதாக ரயில்வே அமைச்சர் தகவல்! 

சொந்தமாக ரயில்வே தடங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2018, 3:00 pm

DIN

புதுதில்லி: சொந்தமாக ரயில்வே தடங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தில்லியில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்பொழுது தனியாருகு சொந்தமாக ரயில்வே தடங்களை அமைக்க அனுமதி அளிப்பது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துஅவர் கூறியதாவது:

தனியாரும் சொந்தமான ரயில்வே தடங்களை அமைக்க அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையில் அதிகமான தனியார் பங்களிப்பு அவசியமானது. பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவருவதில் எங்களுடைய கவனம் இருக்கும்.

தனியார் பங்கெடுப்பின் மூலம் நம்முடைய திறமையின் அளவு அதிகரிக்கும், அதிகமான முதலீட்டை கொண்டு வர முடியும். பட்ஜெட்டில் இவ்வருடம் ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ரெயில்வேயில் வரும் இழப்புகளை, திறமையான நிர்வாகத்தின் மூலமே சரிக்கட்ட முடியும்.

ரயில்வே சிக்னல்களைப் பொறுத்த வரை ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு முறைதான் இப்போது உலகளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனை இந்தியாவுக்கு கொண்டு வர முயல்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நவீன சிக்னல் முறை இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.