தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்தது நாகாலாந்து காங்கிரஸ்

நாகாலாந்தில் மாநில கட்சிகளில் ஒன்றான நாகாலாந்து காங்கிரஸ், நாகாலாந்து மக்கள் கட்சியுடன் (என்பிபி), திங்கள்கிழமை இணைந்தது. மாநிலத்தில் வருகிற 27-ஆம் தேதி

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:41 pm

DIN

நாகாலாந்தில் மாநில கட்சிகளில் ஒன்றான நாகாலாந்து காங்கிரஸ், நாகாலாந்து மக்கள் கட்சியுடன் (என்பிபி), திங்கள்கிழமை இணைந்தது. மாநிலத்தில் வருகிற 27-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணைப்பு நடந்துள்ளது.
நாகாலாந்து மக்கள் கட்சி தேசிய அளவிலான அரசியல் கட்சியாகும். அக்கட்சிக்கு மேகாலய மாநிலத்தில் அதிக செல்வாக்கு உள்ளது. கடந்த 2012-இல் தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து பி.ஏ.சங்மா இக்கட்சியைத் தொடங்கினார்.
அவரது மகன் கான்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே அக்கட்சியுடன் இணைந்ததாக நாகாலாந்து காங்கிரஸ் தலைவர் நிலோ ரெங்மா தெரிவித்தார்.
தேசிய மக்கள் கட்சியால்தான் நாகாலாந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடியும் என்பதால்தான் அக்கட்சியுடன் இணைய முடிவு செய்ததாக ரெங்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். ஆளும் நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே இரு கட்சிகள் இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கான்ராட் கே.சங்மா, நாகாலாந்து காங்கிரஸ், தமது கட்சியுடன் இணைந்துள்ளது மக்கள் தங்கள் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக்கூறினார். வடகிழக்கு பிராந்திர மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே கட்சி தேசிய மக்கள் கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவை அறிவிக்கப்படும் என்று நாகாலாந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அடோ யெப்தோமி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.