மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்திய-பாக். அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும்: ஜம்மு-காஷ்மீர் அரசு வலியுறுத்தல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் சட்டப்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:47 pm

DIN

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அம்மாநில அரசு வலியுறுத்தியது.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அலுவல் திங்கள்கிழமை காலை தொடங்கியதும், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலியான வவிவகாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ மியான் அல்தாஃப் எழுப்பினார். இது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார்.
அவையில் கேள்வி நேரம் முடிந்ததும், பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு பாஜக எம்எல்ஏ ரவீந்தர் ரைனா, அரசை வலியுறுத்தினார். 
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக அவரும் பாஜக தலைவர்களும் கோஷங்களை எழுப்பினர். 
அப்போது தேசிய மாநாட்டுக் கட்சியின் தேவேந்தரர் ராணா, சுயேச்சை எம்எல்ஏ பவன் குப்தா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌதரி அக்ரம் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்கு விரைந்து சென்றனர். 
எல்லையில் தொடர்ந்து வீரர்கள் கொல்லப்படுவதற்கு யார் பொறுப்பு? என்றும் பிரதமர் கூறிய 56 அங்குல இதயம் எங்கே? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 
வவீரர்களின் உடல்கள் மீது அரசியல் நடத்த வேண்டாம் என்று அவர்கள் பாஜகவுக்கு எதிராக சத்தம் போட்டனர். இதனால் அவையில் கூச்சம்-குழப்பம் நிலவியதால், அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் கவிந்தர் குப்தா அறிவித்தார்.
அவை மீண்டும் கூடியதும், மாநில அரசு சார்பில் சட்டப் பேரவை விவகாரத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எல்லையில் நடக்கும் தாக்குதல் தொடர்பான விவகாரம் இந்த அவையில் இப்போது மட்டுமின்றி முன்பும் எழுப்பப்பட்டுள்ளது.
இரு நாடுகள் இடையிலான பிரச்னைக்கு அமைதி, நல்லிணக்கம், பேச்சுவார்த்தை ஆகியவைதான் ஒரே தீர்வு என்பதே நமது நிலைப்பாடு. நீடித்த அமைதிக்கு, முன்னனாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடங்கி வைத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
அப்போது ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ ஜாவைத் பேக் பேசுகையில் 'பாகிஸ்தானைத் தூண்டி விடுவதற்குப் பதிலாக, பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு இரு நாடுகளையும் இந்த அவை கேட்டுக் கொள்ள வேண்டும்' என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா பேசுகையில் 'நாங்கள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் வீரி மற்றும் இளம் எம்எல்ஏவான ஜாவைத் பேக் ஆகிய இருவரும் கூறிய கருத்துகளை ஆதரிக்கிறோம். 
ஜாவைத்தின் அணுகுமுறைதான் சரியானது. நமது தரப்பில் இருந்து நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் எதையும் செய்யக் கூடாது. 
அரசியல்வாதிகள் தங்கள் கருத்துகள் மூலம் நிலைமையை சீர்கெடச் செய்வது வழக்கமாகி விட்டது' என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.