அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நாட்டை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும்: பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு! 

நாட்டை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற பாஜக தலைவர் வினய் கட்யாரின் பேச்சு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது .

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:41 pm IST

புதுதில்லி: நாட்டை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற பாஜக தலைவர் வினய் கட்யாரின் பேச்சு கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது 

ஹைதராபாத்திலிருந்து செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி, 'இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானி என்று அழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான வினய் கட்யார்  தில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இஸ்லாமியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் மதத்தின் பேரால் இந்த நாட்டினை பிளவுபடுத்தியுளார்கள். அவர்கள் இந்த நாட்டில் வசிக்க என்ன அவசியம் இருக்கிறது? அவர்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்களாதேசத்துக்கோ செல்லலாம். அவர்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?  

வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தாதவர்கள், தேசிய கொடிக்கு அவமரியாதை இழைப்பவர்களை தண்டிக்கும் விதமாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பாகிஸ்தான் கொடியினை இங்கு ஏற்றுபவர்கள் கூடதண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.