மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் "நீட்" தேர்வு அவசியம்: வருகிறது புது சட்டம்! 

இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்ககளும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :7 பிப்ரவரி 2018, 8:18 am

DIN

புதுதில்லி: இனி வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்ககளும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக  அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் ஏழாயிரம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் செல்வது சீனா மற்றும் ரஷ்ய நாடுகளுக்குத்தான். தற்போதுள்ள விதிகளின் படி, இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வினை 50% மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பினால், இந்திய மருத்துவ ஆணையத்திடம் 'தகுதிச் சான்றிதழ்' பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும்.

பின்னர் அங்கிருந்து படிப்பினை முடித்து திரும்புபவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய விரும்பினால் இந்திய மருத்துவ ஆணைம் நடத்தும்  'அனுமதி உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மொத்தம் தேர்வு எழுதுபவர்களில் 10 முதல் 15% பேரே தேர்ச்சி பெறுகின்றனர். இது அங்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் கலவி அறிவு குறித்தும், அங்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் பற்றியும் ஒருங்கே சந்தேகங்களைக் கிளப்புகிறது. 

இவற்றில் ஒரு பகுதியினை மட்டுமாவது சரி செய்யும் பொருட்டு இந்த ஆண்டு முதல் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் "நீட்" தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சட்டத்திருத்தம் வரவுள்ளது.

இதன் மூலம்  50% மதிப்பெண்கள் பெற்ற, சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.