பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை: மெஹபூபா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை: மெஹபூபா வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
ஜம்முவில் உள்ள அந்த மாநில சட்டப் பேரவையில் இதுகுறித்து அவர் திங்கள்கிழமை பேசியதாவது:
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஃபரூக் அப்துல்லாவோ (தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்), மெஹபூபா முஃப்தியோ வலியுறுத்தும்பட்சத்தில் அவர்களை தேச விரோத சக்திகள் என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர, மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேறு உபாயம் இல்லை.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் (காஷ்மீர் மக்கள்) வலியுறுத்தவில்லையெனில், வேறு யார் வலியுறுத்தவார்கள்? போரை உபாயமாக வைத்து கொள்ளக் கூடாது.
இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 3 போர்களில் ஈடுபட்டுள்ளன. அந்தப் போர்கள் அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. கார்கில் போரிலும் கூட வெற்றி பெற்றோம். ஆனால், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை பிரச்னைக்கு மட்டும் தீர்வு காணப்படவில்லை.
எல்லைப் பகுதிகளிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் காஷ்மீர் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சியும், ஆளும் கட்சிகளும் ஆதரிப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com