ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உ.பி.: காங்கிரஸில் இணைந்தார் நசீமுதீன் சித்திக்கி

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நசீமுதீன் சித்திக்கி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:36 pm

DIN

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நசீமுதீன் சித்திக்கி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கிய முஸ்லிம் தலைவராக அறியப்பட்ட சித்திக்கி, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு மே மாதம் பகுஜன் சமாஜில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தவிர மாநில முன்னாள் அமைச்சர்கள் ஒ.பி.சிங், லியாகத் அலி மற்றும் முன்னாள் எம்எல்ஏக் கள் உள்ளிட்டோர் காங்கிரஸில் இணைந்தனர்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆஸாத், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உள்ளிட்டோர் தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சித்திக்கியின் ஆதரவாளர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. நானா படோல் அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸில் இணைந்தார். அவர் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.