மதுக்கோப்பையை தலையில் அடித்து உடைக்கும் விடியோ வெளியிட்ட பிரபல நடிகை! 

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா  மதுக்கோப்பை ஒன்றை தனது தலையில் தானே அடித்து உடைக்கும் விடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  
மதுக்கோப்பையை தலையில் அடித்து உடைக்கும் விடியோ வெளியிட்ட பிரபல நடிகை! 
Updated on
1 min read

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா  மதுக்கோப்பை ஒன்றை தனது தலையில் தானே அடித்து உடைக்கும் விடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்பொழுது அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘குவாண்டிகோ’வின் மூன்றாவது சீசனில் பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் சில  ஹாலிவுட் படங்களும் கைவசம் உள்ளன. மேலும் சில ஹாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

குவாண்டிகோ தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பில் ப்ரியங்கா ஓய்வின்றி நடித்து வருகிறார். இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா  மதுக்கோப்பை ஒன்றை தனது தலையில் தானே அடித்து உடைக்கும் விடியோ ஒன்றை, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

அந்த வீடியோவில் ஒரு கண்ணாடி டம்ளரில் மது குடித்துவிட்டு, பின்னர் அந்த டம்ளரை  ப்ரியங்கா சோப்ரா தனது தலையில் அடித்து உடைப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. அந்த வீடியோ பதிவுடன் ப்ரியங்கா சோப்ரா ஒரு செய்தியினையும் வெளியிட்டு இருந்தார்.

அதில், "‘நீங்கள் ஓய்வின்றி பணியாற்றினால் இதுதான் நடக்கும்... இதை வீட்டில் முயற்சிக்க வேண்டாம். ஒரு மோசமான நாளுக்குப் பிறகு நான் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்தேன். ஓ.கே., ஓ.கே. நான் நிறுத்திக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

அத்துடன் இறுதியில் அவர் தான் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடரின் அரங்கப் பொருட்கள் வடிவமைக்கும் குழுவினருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.  இதனால் அவர் உடைத்த கண்ணாடி டம்ளர் போலியானது என்று நாம் உணர்ந்து கொள்ளவாய்ப்பு உள்ளது.

ஆனால் ப்ரியங்காவின் இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை சந்தித்தது. பலரும் அவர் செய்தது தவறான செயல்; இப்படி செய்திருக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com