சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளாட்சித் தேர்தல்: பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்! 

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:21 pm

DIN

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறது.

பஞ்சாபில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட அகாலிதளம் - பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் லூதியானா மாநகராட்சியில் கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் செவ்வாயன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் மாலை நிலவரப்படி மாநகராட்சியில் மொத்தமுள்ள 95 வார்டுகளில் 62 இடங்களில் ஆளும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. அகாலிதளம் 11 இடங்களிலும், பாஜக 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

இதன் காரணமாக அகாலிதளம் - பாஜக கூட்டணி வசம் இருந்த லூதியானா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.