வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

7:30 மணிநேரத்தில் புதிய பாலம் கட்டிய ரயில்வேத்துறை!

பழுதடைந்த பாலத்துக்கு மாற்றாக 7:30 மணி நேரத்தில் புதிய பாலம் கட்டியது வடக்கு மண்டல ரயில்வேத்துறை.

News image
Updated On :6 ஜனவரி 2018, 10:00 am

100 வருடங்கள் பழமையான பாலத்துக்கு மாற்றாக 7:30 மணி நேரத்தில் புதிய பாலம் கட்டி வடக்கு மண்டல ரயில்வேத்துறை அசத்தியுள்ளது.

இதுகுறித்து வடக்கு மண்டல ரயில்வேத்துறை பொது மேலாளர் விஷ்வேஷ் சௌபே கூறியதாவது:

லக்னௌ, சஹாரண்பூர் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில், புண்ட்கி, நாகினா இடையிலான ரயில் பாதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இங்கு 100 வருடங்கள் பழமையான ரயில்வே பாலம் உள்ளது. எனவே இதை மாற்ற முடிவு செய்தோம். இதையடுத்து 100 மற்றும் 60 டன்கள் எடையை சுமக்கும் கிரேன், ஜேசிபி மற்றும் பொக்லேன் இயந்திரங்களின் உதவியுடன் புதிய ஸ்டீல் பாலம் அமைக்க திட்டமிட்டோம்.

அவ்வகையில் இந்த புதிய பாலம் 7:30 மணி நேரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை இந்த பாதையில் உள்ள 4 பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்குள்ளாக மேலும் மூன்று புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன என்றார்.

முன்னதாக, பிட்டோரா என்ற இடத்தில் வடக்கு மண்டல ரயில்வேத்துறையால் 48 மீட்டர் நீளம் கொண்ட பாலம் 8 மணி நேரத்தில் அமைக்கப்பட்டிருந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.