புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காங்கிரஸ் தலைவரானவுடன் முதல் வெளிநாட்டுப் பயணம்: பஹ்ரைன் மன்னரைச் சந்திக்கும் ராகுல்! 

காங்கிரஸ் தலைவரானவுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைன் மன்னரைச் சந்திக்க உள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2018, 10:27 am

DIN

மனாமா: காங்கிரஸ் தலைவரானவுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைன் மன்னரைச் சந்திக்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவரானவுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ராகுல் காந்தி ஞாயிறன்று பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு திங்களன்று நடைபெறும் இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் மாநாட்டில்  சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் ராகுலுடன் வெளிநாடுகளில் வாழும் சுமார் 50 இந்திய வம்சாவளி பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

பஹ்ரைன் அரசின் விருந்தினராக அங்கு சென்றுள்ள ராகுல் காந்தி, பஹ்ரைன் மன்னர் ஹமாஸ் பின் ஈசா அல் கலிபா-வை சந்தித்துப் பேசுவார் என தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.